195
யாழ்ப்பாணத்தில் வெளிநாட்டு சிகரெட்களை விற்பனை செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து சட்டவிரோதமான முறையில், வரிகள் செலுத்தப்படாது நாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட சிகரெட்டுகளை விற்பனை செய்த குற்றச்சாட்டின் கீழே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 240 சிகரெட்களை மீட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகளின் பின்னர் பெண்ணை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பருத்தித்துறை காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Spread the love