98
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு 11மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துப் பொருட்கள் கையளிக்கப்பட்டது.
உமந்தவ சர்வதேச பௌத்த கிராமத்தின் சார்பில் சிறீ சமந்தபத்ர மகா ஆராத் தேரரினால் குறித்த மருந்துப் பொருட்கள் வைத்தியசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்றைய தினம் புதன்கிழமை (14.08.24) இடம்பெற்ற நிகழ்வில் வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் யமுனானந்தா, கண் வைத்திய நிபுணர் மலரவன், யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் காளிங்க ஜெயசிங்க, யாழ்ப்பாணப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
Spread the love