143
வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட பசுமாட்டினை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பகுதியை சேர்ந்த பயனாளி ஒருவருக்கு வழங்கப்பட்ட சுமார் 05 இலட்ச ரூபாய் பெறுமதியான பசு மாடு ஒன்று திருட்டு போயிருந்தது
அது தொடர்பில் பாதிக்கப்பட்டவரால், சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர், அச்செழு பகுதியை சேர்ந்த இருவரை சந்தேகத்தில் கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்தன் அடிப்படையில் திருடப்பட்ட பசு மாடு மீட்கப்பட்டுள்ளது
கைது செய்யப்பட்ட இருவரையும் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love