687
குடும்ப பிரச்சனையில் , மனைவியை அறைக்குள் வைத்து பூட்டி கணவன் தீ மூட்டியதில் மனைவி தீக்காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அச்சுவேலி பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், அப் பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் நிருத்திகா (வயது 28) எனும் குடும்ப பெண்ணே படுகாயமடைந்துள்ளார்.
கணவன் மணைவிக்கு இடையில் நீண்ட காலமாக பிரச்சனைகள் நிலவி வந்ததாகவும், நேற்றைய தினமும் இருவருக்கும் இடையில் பிரச்சனைகள் ஏற்பட்ட நிலையில், கணவன் , மனைவியை வீட்டின் அறைக்குள் இழுத்து சென்று தாக்கிய பின்னர், மனைவிக்கு தீ வைத்து விட்டு அறை கதவை பூட்டி விட்டு தப்பி சென்ற நிலையில், அயலவர், குறித்த பெண்ணை காப்பாற்றி அச்சுவேலி வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் அச்சுவேலி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love