125
நாய் கடித்தமைக்கு உரிய சிகிச்சைகள் பெறாததால், நோய் வாய்ப்பட்ட வயோதிப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய மகேந்திரன் சாந்தி எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணுக்கு கடந்த மாதம் 24ஆம் திகதி நாய் கடித்துள்ளது. அவர் அதுக்கு உரிய சிகிச்சைகள் பெறாது அசண்டையீனமாக இருந்தமையால் கடந்த 15ஆம் திகதி கிருமி தொற்று ஏற்பட்டு , நோய் வாய்ப்பட்ட நிலையில் யாழ், போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (26.08.24) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Spread the love