477
யாழ்ப்பாணத்தில் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கி வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்ட பெண் ,வட்டி பணத்தினை மீளளிக்க முடியாத நிலையில் தனது உயிரை மாய்த்துள்ளார்
யாழ்ப்பாண புறநகர் பகுதியை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரே நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார்
குறித்த குடும்ப பெண் , வியாபார நோக்கத்திற்காக தனிநபர் ஒருவரிடம் மீற்றர் வட்டிக்கு பணம் வாங்கியுள்ளார். எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரம் நடைபெறாததால் , வட்டி பணத்தினை கூட மீள கையளிக்க முடியாத நிலையில் காணப்பட்டுள்ளார்.
கடன் கொடுத்த நபர் பல்வேறு வகையான நெருக்கடிகளை கொடுத்தமையால் , கடுமையான மனவுளைச்சலில் இருந்த குறித்த குடும்ப பெண் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் என மரண விசாரணையின் போது உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் கூறியுள்ளனர்
Spread the love