217
தனது 10 வயதான மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றச்சாட்டில் ஆசிரியரான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 10 வயதான பாடசாலை மாணவியை , ஆசிரியரான அவரது தந்தை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வருவதாக இளவாலை காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் தந்தையை கைது செய்துள்ளனர்.
அதேவேளை மாணவியை மீட்ட காவல்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் , தந்தையிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் , அவரை நீதிமன்றில் முற்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love