117
ரின் நினைவு தினத்தை முன்னிட்டு லிங்காஸ்வர கீதம் வழங்கும் “பன்முக நோக்கில் பாரதி” எனும் விசேட நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.
வடமராட்சி வல்லையில் உள்ள விக்னேஸ்வரா திருமண மண்டபத்தில்( Yarl beach hotel & Restaurant ) நாளை புதன்கிழமை மாலை 4 மணிக்கு இடம்பெறவுள்ளது.
லிங்காஸ்வர கீத இயக்குநர் ஷாஜிதா அட்ஜெயலிங்கம் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம அதிதியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராஜாவும் கௌரவ அதிதியாக யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதர் சாய் முரளியும் சிறப்பு அதிதிகளாக வர்த்தகர் சண்முகசுந்தரம் பிறேம்குமாரும் பாடலாசிரியர் வெற்றி துஷ்யந்தனும் கலந்துகொள்ளவுள்ளனர்.
குறித்த நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை இசை, நடனம் ,இலக்கியம் என்னும் பல்கோண பார்வையில் வெளிப்படுத்தும் வகையிலான பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
Spread the love