224
கடந்த பத்தாண்டு காலமாக தனது வீட்டினை காவல் காத்து வந்த நிலையில் உயிரிழந்த பைசா என அழைக்கப்படும் நாய்க்கு , வீட்டின் உரிமையாளர் பெருமெடுப்பில் இறுதிக்கிரியை செய்து , உடலை நல்லடக்கம் செய்துள்ளார்.
கடந்த 2006ஆம் ஆண்டு 08ஆம் மாதம் 20ஆம் திகதி பிறந்த பைசா என பெயர் சூட்டப்பட்ட நாய்க்குட்டியை அதனது 08ஆவது வயதில் இருந்து, யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் வளர்த்து வந்துள்ளார். கடந்த பத்தாண்டு காலமாக பைசாவை அவர் வளர்த்து வந்துள்ளார். அந்நிலையில், கடந்த சில நாட்களாக நோய் வாய்ப்பட்டிருந்த பைசா நேற்றைய தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளது.
அதனை அடுத்து , பிரேத பெட்டி ஒன்றில் பைசாவை வைத்து , வீட்டில் அஞ்சலிக்காக வைத்திருந்தார். வீட்டார் , அயலவர்கள் என பைசாவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். அதனை தொடர்ந்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பைசாவின் உடலை, பாண்ட் வாத்தியங்கள் முழங்க காரில் ஊர்வலமாக எடுத்து சென்று, உரிமையாளரின் காணியில் பைசாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Spread the love