169
யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வெவ்வேறு பகுதிகளில் மூவர் தவறான முடிவெடுத்து தமது உயிரை மாய்த்துள்ளார்கள். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த 22 வயதுடைய யுவதி ஒருவர் , வீட்டார் வெளியில் சென்ற சமயம் வீட்டில் தனது உயிரை மாய்த்துள்ளார்.
பெரியவிளான் பகுதியை சேர்ந்த 13வயது சிறுவன் , கேம் விளையாட தந்தையிடம் தொலைபேசியை கேட்ட போது. தந்தை தொலைபேசியை கொடுக்காததால் வீட்டின் அறை ஒன்றுக்குள் சென்று தனது உயிரை மாய்த்துள்ளாா். அத்துடன் நெடுந்தீவு பகுதியில் 33 வயதுடைய இளைஞன் ஒருவா் தனது உயிரை மாய்த்துள்ளாா்.
Spread the love