Home இலங்கைவாக்கெண்ணும் நிலையத்தில் கள ஆய்வு

வாக்கெண்ணும் நிலையத்தில் கள ஆய்வு

by admin

 

எதிர்வரும் சனிக்கிழமை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் யாழ்ப்பாணத்தின்  வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டுவரும்  ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக  யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை கள ஆய்வு செய்யப்பட்டது.

இக் கள ஆய்வில்   மண்டப ஒழுங்குகள், போக்குவரத்து, பொது வசதிகள், நலனோன்பு வசதிகள், மின்சார வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்ற விடயங்கள் ஆய்வு செய்யப்பட்டதுடன் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டு  தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கள ஆய்வில்  உதவித் தேர்தல்கள் ஆணையாளர் இ.கி.அமல்ராஜ், வடமாகாணப் பிரதிப் காவல்துறைமா அதிபர் திரு ஏ. ஜே. ஹாலிங்க ஜெயசிங்க,  சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர், காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் உதவி தெரிவாட்சி அலுவலர்கள்
பங்குபற்றினார்கள்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More