140
யாழ்ப்பாணத்தில் கடற்தொழிலுக்கு சென்ற முதியவரை காணவில்லை என ஊர்காவற்துறை காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைநகரை சேர்ந்த முருகேசு விநாயகமூர்த்தி (வயது 74) என்பவரே காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வீட்டில் இருந்து கடற்தொழிலுக்காக நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை சென்றவர் மாலை வரையில் வீடு திரும்பாத நிலையில் வீட்டார் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love