207
தியாக தீபம் திலீபனின் வரலாற்றினை எதிர்கால சந்ததியினருக்கு கடத்தும் முகமாக அவரின் வரலாற்றினை எடுத்தியம்பும் “பார்த்திபன் திலீபனாக! திலீபன் தியாக தீபமாக!!” எனும் தொனிப்பொருளுடன் கூடிய ஆவணக் காட்சியகம் இன்று வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபன் நினைவாலயம் முன்றலில் தியாக தீபம் திலீபன் நினைவுச் சதுக்கம்
இன்று வெள்ளிக்கிழமை (20.09.24) மாலை 6.30 மணியளவில் மாவீரர் பெற்றோர்கள் மற்றும் முன்னாள் போராளிகளின் பங்கேற்புடன் திறந்து வைக்கப்படவுள்ளது.
தியாக தீபம் திலீபனின் வரலாற்று புகைப்படங்கள் என்பன இதன்போது தொகுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படவுள்ளது.
Spread the love