லெபனான் – பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 195 பேர் காயமடைந்துள்ளனா். ஹமாஸ் அமைப்புக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தற்போது லெபனானை தளமாக கொண்டுள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் மீதும் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. சில தினங்களுக்கு முன், இஸ்ரேல் , லெபனான் மீது மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில், 21 குழந்தைகள், 39 பெண்கள் உள்பட 274 பேர் கொல்லப்பட்டதுடன் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லாவும் கொல்லப்பட்டார்.
இந்நிலையில், தற்போது இஸ்ரேல் மீண்டும் லெபனான் மீது மேற்கொண்ட வான்வழித் தாக்குதலில் 33 பேர் கொல்லப்பட்டதுடன் 195 பேர் காயமடைந்துள்ளனர். பெய்ரூட்டில் மேற்கொள்ளப்படடு வரும் தாக்குதல்கள் மிகவும் கவலை அளிக்கிறது என ஐ.நா., வருத்தம் தெரிவித்துள்ளது