222
வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு, வேலணை பிரதேச சபை நுலகத்தினரால், சித்திர போட்டி நடாத்தப்படவுள்ளது. வயது கட்டுப்பாடின்றி திறந்த போட்டியாக நடாத்தப்படவுள்ள போட்டியில், பிரதேச சபை எல்லைக்குள் வசிப்பவர்கள் கலந்து கொள்ள முடியும் எனவும், போட்டியாளர்கள், தாங்கள் வாசித்த புத்தகம் ஒன்றின் அட்டைப்படத்தை A3 தாளில் எந்த வர்ணத்தை பயன்படுத்தியும் சித்திரம் வரைய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள் தாங்கள் வரைந்த சித்திரங்களை எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னர், வேலணை பொது நூலக நூலகருக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
Spread the love