Home இலங்கை கைக்குண்டுகளுடன் இரு இளைஞர்கள் கைது

கைக்குண்டுகளுடன் இரு இளைஞர்கள் கைது

by admin

 

யாழ்ப்பாணத்தில் இரண்டு கைக்குண்டுகள் உள்ளிட்டவற்றுடன் வன்முறை கும்பலை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  யாழ் . மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு  காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , மானிப்பாய் பகுதியை சேர்ந்த 18 மற்றும் 24 வயதுடைய இரு இளைஞர்களை காவல்துறையினர் கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 02 கைக்குண்டுகள், 04 வாள்கள் , 04 பெற்றோல் குண்டுகள் என்பவற்றை மீட்டுள்ளனர்.   கைது செய்யப்பட்ட நபர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மானிப்பாய்  காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள மானிப்பாய் காவல்துறையினர் , அவர்களை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More