140
யாழ். போதனா வைத்தியசாலையில் கண்புரை சத்திர சிகிச்சை வெற்றி பெற்றுள்ளது என யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் சி.யமுனானந்தா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பதிவு செய்யப்பட்ட கண்புரை நோயாளர்களுக்கான சத்திர சிகிச்சைகள் வெற்றியளித்துள்ளன. எனவே யாழ். மாவட்டத்திலோ அல்லது வடமாகாணத்திலோ கண்புரை நோயினால் பாதிக்கப்பட்ட பார்வைக் குறைபாடுடையோர் குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் எவரேனும் இருப்பின் யாழ்.போதனா வைத்தியசாலையின் கண்ணியல் சத்திர சிகிச்சைப்பிரிவை நாடுவதன் ஊடாக ஒரு மாத காலத்துக்குள் உரிய சிகிச்சை அளிக்கப்படும் என்றார்.
Spread the love