116
வட மாகாண விவசாயத் திணைக்களத்தின் ஒழுங்கமைப்பில், “சூழல் நேய நிலைபேறான விவசாய யுகம் நோக்கி,” எனும் தொனிப்பொருளிலான விவசாயக் கண்காட்சி இன்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது
திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில், இன்றைய தினம் புதன்கிழமை ஆரம்பமாகி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரையிலான, மூன்று தினங்கள் கண்காட்சி நடைபெறவுள்ளது. முப்பதிற்கும் மேற்பட்ட விடயத் தலைப்புக்களை உள்ளடக்கியதாக இக் கண்காட்சி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
Spread the love