220
யாழ்ப்பாணத்தில் தனது காணியை விற்ற பணம் ஒரு கோடியே 5 லட்ச ரூபாய் பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த நபரை தாக்கி விட்டு பணத்தை இருவர் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், இன்றைய தினம் புதன்கிழமை தனது காணியை விற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்றில் பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வீதியில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணத்தினை கொள்ளையடித்து சென்றுள்ளனர். பணத்தினை பறிக்கொடுத்தவர், மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love