122
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை புகையிரதத்துடன் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி குருக்கள் கிணற்றடி பகுதியை சேர்ந்த கந்தையா இலங்கேஸ்வரன் (வயது 58) என்பவரே உயிரிழந்துள்ளார்.
சுன்னாகம் பகுதியில் தான் தனது தாயார் வீட்டுக்கு தண்டவாளத்தை கடந்து செல்ல முற்பட்ட வேளை புகையிரத்துடன் மோதியதில் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு , யாழ் . போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
Spread the love