2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. எதிா்வரும் ஒக்டோபர் 31, நவம்பர் 1 மற்றும் 4 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்புகள் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாத அனைத்து அரச ஊழியர்களுக்கும் நவம்பர் 7 மற்றும் 8ஆம் திகதிகளில் வாக்களிக்கவும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பை பயன்படுத்தும் வாக்காளர்கள் தமது பணியிடங்கள் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கோ அல்லது பிரதேச செயலகத்திற்கோ சென்று வாக்களிக்க முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.