117
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் தனிமையில் வசித்து வந்த மூதாட்டி தீக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கரணவாய் தெற்கை சேர்ந்த 70 வயதான மூதாட்டியான குணராஜசிங்கம் ஞானே
குறித்த மூதாட்டி வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளார். நேற்றைய தினம் வியாழக்கிழமை மூதாட்டியின் நடமாட்டத்தை காணாத அயலவர்கள் , மூதாட்டியின் வீட்டினுள் சென்று பார்த்த போது மூதாட்டி தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக பருத்தித்துறை வைத்தியசாலையில் ஒப்படைத்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
Spread the love