அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ‘சதோச’ மனித புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த திங்கட்கிழமை(7) தொடக்கம் நேற்று வெள்ளிக்கிழமை (11) வரை ஏற்கனவே சதோச மனித புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளோடு, காணப்படும் வேறு பொருட்கள் காணப்படும் பெட்டிகள்,பொதி செய்யப்பட்டு,நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
பல வருடங்களுக்கு பிற்பாடு,குறித்த ஐந்து நாட்களும்,பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரும்,சட்ட வைத்திய அதிகாரி குழுவும் மன்னார் நீதவான் முன்னிலையில்,காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தினரும்பாதிக்கப்பட்
இதன் போது மனித எலும்பு தொகுதிகள் தனியாகவும்,அதனுடன் எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தனியாகவும் பிரித்தெடுக்கப்பட்டு,பொதி செய்யப்பட்டு பாதுகாப்பாக நீதிமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது.
இது தொடர்பான மேலதிக விடையங்கள் சம்பந்தமாக மனித எலும்புகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை யும்,மீட்கப்பட்ட ஏனைய பொருட்கள் குறித்து களனி பேராசிரியர் ராஜ் சோமதேவ வின் தொல்பொருள் அறிக்கையையும் நீதிமன்றம் கோரியுள்ளது. அவர்கள் குறித்த விடயங்கள் தொடர்பாக எதிர் வரும் புதன்கிழமை(16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது,இவ்விடயம் தொடர்பாக தீர்மானிக்கப் படவுள்ளது.