164
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையேயான கப்பல் போக்குவரத்து 2 நாட்களுக்கு நிறுத்தப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடல் சீற்றத்தினால் இந்த கப்பல் போக்குவரத்து இன்றும்(15) நாளையும்(16) நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
2 நாட்களுக்கு பின்னர் கடல் சீற்றம் தொடர்பில் அவதானித்த பின்னரே தொடர்ந்து கப்பலை இயக்குவதற்கான அனுமதி வழங்கப்படுமா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love