146
யாழ்ப்பாணத்தில் 840 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஏழாலை பகுதியில் போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருப்பதாக சுன்னாகம் காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் இளைஞனை கைது செய்ததுடன் , இளைஞனிடம் இருந்து 840 போதை மாத்திரைகளையும் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞனை காவல் நிலையத்தில் தடுத்து வைத்துகாவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். குறித்த இளைஞன் ஏற்கனவே போதை மாத்திரைகளுடன் கைதாகி அது தொடர்பிலான வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் நிலுவையில் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை நேற்றைய தினம் மானிப்பாய் காவல்துறைப் பிரிவில் 1400 போதை மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பி டத்தக்கது.
Spread the love