நாடாளுமன்ற தேர்தலுக்காக குறிக்கப்பட்ட திகதி, இன்னும் சில தினங்களில் மாற வாய்ப்புள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, தேர்தலுக்காக ஒதுக்கப்பட்ட தினத்தில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சட்டத்தின்படி, ஒக்டோபர் 4ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11ஆம் திகதி வரை வேட்புமனுக்கள் கோரப்பட்டன. வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து ஐந்து வாரங்களுக்கு குறையாமலும் ஏழு வாரங்களுக்கு மிகையாகாமலும் வாக்கெடுப்புக்கான திகதியை நிர்ணயிக்க வேண்டும் என்று, சட்டம் தெளிவாகக் கூறுகிறது என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனா்.
அதன்படி, வேட்புமனு தாக்கல் முடிவடைந்த ஒக்டோபர் 11ஆம் திகதி முதல் கணக்கிடப்படும் ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15ஆம் திகதியும், ஏழு வார கால அவகாசம் நவம்பர் 29ஆம் திகதியுமே நிறைவடையும் .
இதனால் தற்போது நாடாளுமன்றத் தேர்தலுக்காக குறிக்கப்பட்டுள்ள நவம்பர் மாதம் 14ஆம் திகதி, சட்டக் காலத்தில் இடம்பெறாததால், அன்றைய தினம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது சட்டத்திற்கு முரணானது என நிபுணர்கள் மேலும் சுட்டிக்காட்டியுள்ளதனால் தோ்தல் தினம் மாற வாய்ப்புள்ளதாக தொிவிக்கப்படுகின்றது