173
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட 12 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். படகொன்றில் 12 பேரும் பருத்தித்துறை கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த வேளை , அப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் அவர்களை கைது செய்ததுடன் , அவர்களின் படகினையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்டவர்களையும் படகினையு ம் மயிலிட்டி கரைக்கு கொண்டு வந்துள்ள கடற்படையினர் , கைது செய்யப்பட்டவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love