காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் அது தொடர்பாக வேலை செய்கின்ற சிவில் சமூக அமைப்புகளுக்கும்,அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளுக்கும் இடையே உள்ள தொடர்பை வலுப்படுத்தி அந்த வலுப்படுத்துதல் ஊடாகக் காணாமல் போனவர்களின் குடும்ப பிரதிநிதிகளுக்கு உதவி செய்யும் நோக்கிலேயே இக் கலந்துரையாடல் இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் , காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஆணையாளர் யோகராஜா ,காணாமல் போன ஆட்கள் பற்றிய தலைமைக் காரியாலய அலுவலக உத்தியோகத்தர்கள், மன்னார் பிராந்திய அலுவலக உத்தியோகத்தர்கள் , சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறிப்பாக அரசாங்கத்திடம் ஒப்படைக்கபட்டார்கள் குறித்து இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் முன்வைக்கப்படவில்லை என கருத்துக்கள் முன் வைக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக மன்னார் மாவட்டத்தில் சுமார் 300 பேர்கள் வரையிலான நபர்களுடைய படங்கள் மற்றும் காணாமல் போன விதம் தொடர்பில் ஆவணமாக தயாரிக்கப்பட்ட புத்தகமொன்று சர்வதேச நிறுவனம் உட்பட பலரிடம் கையளிக்கப்பட்டுள்ள குறித்தும் சுட்டிக் காட்டப்பட்டது.