Home இலங்கைஅனைத்து வசதிகளும், சலுகைகளும் நீக்கப்படும்!

அனைத்து வசதிகளும், சலுகைகளும் நீக்கப்படும்!

by admin

கடந்த அரச தலைவர்களின் சலுகைகள் மற்றும் நன்மைகள் எதுவாக இருந்தாலும் முற்றாக நீக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.

காலி, பத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பது மக்களின் கடமையல்ல. சுற்றறிக்கைகள், நாடாளுமன்ற சட்டம் மற்றும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவ்வாறான நன்மைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

“சுற்றறிக்கைகள் மற்றும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று அவர் கூறினார்.

“இப்படி ஒரு நாட்டை நாங்கள் நடத்த முடியாது. 163 மெய்க்காவலர்கள் , அம்புலன்ஸ், ஜீப், கார் போன்றவற்றைக் கேட்கிறார்கள். 17 அல்லது 18 BMW வாகனங்களைக் கோருகிறார்கள். இந்த வசதிகள் அனைத்தையும் இல்லாமல் செய்வோம். அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவை ஆகும்” என அவர் கூறினார்.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More