250
பதுளை – துன்ஹிந்த வீதியில் பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 35 பேர் வரை காயமடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் இருவர் பல்கலைக்கழக மாணவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 41 பேர் மாணவர்கள் சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும் காயமடைந்தவர்கள் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் ஆறு பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறையினா் குறிப்பிட்டுள்ளனர்.
Spread the love