125
கட்சித் தலைவர், முதன்மை வேட்பாளர் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு செய்யப்பட்டது. இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கலையரங்கில் வெளியிடப்பட்டது.
இதன்போது தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, யாழ் தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவஞானம் சிறீதரன் ஆகியோர் கலந்துகொள்ளாத நிலையில் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது. எனினும் தமிழரசுக் கட்சியின் தலைவர் உடல்நலக் குறைவு காரணமாக வரவில்லை என கூட்டத்தில் கூறப்பட்டது.
Spread the love