105
நாடாளுமன்றத் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளா் அட்டை விநியோகம் இன்றுடன் (7) முடிவடைவதாக தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட 27ஆம் திகதி முதல் இன்று வரை வாக்காளர் அட்டை கிடைக்கப்பெறாத வாக்காளர்கள் நாளை (8) தபால் நிலையங்களுக்கு சென்று தங்களது வாக்காளர் அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் தொிவிக்கப்பட்டு்ள்ளது.
நாளை முதல் பொதுத் தேர்தல் நடைபெறும் நவம்பர் 14ஆம் திகதி வரை உத்தியோகபூர்வ வாக்காளா் அட்டைளை தபால் நிலையத்தில் பெற்றுக் கொள்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அதற்காக வாக்காளர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தொிவிக்கப்பட்டு்ள்ளது.
இதேவேளை பொதுத் தேர்தல் தொடர்பான தேர்தல் பிரசாரங்கள் திங்கட்கிழமை (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Spread the love