பாகிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது 24 போ் கொல்லப்பட்டு்ள்ளதுடன் முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. . இன்று காலை இடம்பெற்ற இந்த குண்டுவெடிப்பு தாக்குதல் சம்பவத்துக்கு தாங்கள் தான் காரணம் என பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
பாகிஸ்தானின் குவெட்டா புகையிரத நிலையத்தில் தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. புகையிரத நிலையத்தில் பிரயாணச் சீட்டு முன்பதிவு அலுவலகத்தில் ஏராளமான மக்கள் காத்திருந்த வேளை அங்கிருந்து புகையிரத நடைமேடைக்கு செல்லும் வழியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.