பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் இன்று(11) நள்ளிரவுடன் நிறைவடைகின்ற நிலையில் அனைத்து வேட்பாளர்களும் இன்று(11) நள்ளிரவுக்குள் தமது பிரசார நடவடிக்கைகளை நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதுவரை தேர்தல் சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் வேட்பாளர்கள் உள்ளிட்ட 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளநிலையில் பொதுத் தேர்தல் தொடர்பில் கிடைத்துள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை 2,580 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அவற்றில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 20 முறைப்பாடுகளும் தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 2,525 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.