120
யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு நிலையத்தில் கடமையில் இருந்த காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் . கோப்பாய் காவல் நிலையத்தில் கடமையாற்றும் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 34) எனும் காவல்துறை உத்தியோகஸ்தரே உயிரிழந்துள்ளார்
உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாசாலையில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த நிலையில் இன்றைய தினம் வியாழக்கிழமை காலை உயிரிழந்த நிலையில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
அதனை அடுத்து சடலத்தை மீட்ட கோப்பாய் காவல்துறையினா் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைத்துள்ளதுடன் , சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த சம்பவத்தினால் இன்றைய தினம் காலை குறித்த வாக்களிப்பு நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன் , பிறிதொரு காவல்துறை உத்தியோகத்தர் கடமைக்கு அமர்த்தப்பட்டு , வாக்களிப்பு சுமூகமான முறையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Spread the love