தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்த நடிகை கஸ்தூரியை ஹைதராபாத்தில் வைத்து காவல்துறையினா் கைது செய்துள்ளனர். சமீபத்தில் சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் பிராமணர்களுக்கு ஆதரவாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி தெலுங்கு மக்கள் பற்றி கூறிய கருத்து சர்ச்சையை எழுப்பியிருந்தது.
300 ஆண்டுகளுக்கு முன்பு வந்த ஒரு ராஜாவுக்கு அந்தப்புர மகளிருக்கு சேவை செய்ய வந்தவர்களை, தெலுங்கு பேசியவர்களை எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும்போது.. எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள்?” என்று பேசியிருந்தார்.
கஸ்தூரியின் இந்த கருத்து தெலுங்கு பேசும் மக்களை இழிவுப்படுத்திவிட்டதாக காவல் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டன. இதனையடுத்து காவல்துறையினா் கஸ்தூாியை விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை வழங்க சென்றபோது அவர் தலைமறைவானது தெரியவந்தது. இதனால் கஸ்தூரி விரைவில் தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்படலாம் என்று கூறப்பட்ட நிலையில் இன்று அவா் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளாா். .