பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி மீண்டும் தேர்தல் ஆணைக்குழு கூடும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு ஒன்று வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமாகும்.
இதேவேளை உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான நிதித் தேவை குறித்து எதிா்வரும் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக்கூட்டத்தில் தேர்தல் திகதி குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.