253
புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றுள்ளது. நேற்றுக் காலை 22 அமைச்சர்கள் அடங்கிய புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் செய்துகொண்ட நிலையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றுள்ளது . மேலும் புதிய அரசாங்கத்தின் பிரதி அமைச்சர்கள் நாளை மறுதினம் வியாழக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உள்ளிட்ட 18 அமைச்சுகளின் செயலாளர்கள் இன்று நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது.
Spread the love