748
வடமாகாண மர நடுகை மாதத்தை முன்னிட்டு தமிழ்த் தேசிய பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடத்தும் கார்த்திகை வாசம் மலர் மற்றும் மலர் கண்காட்சியின் தொடக்க நிகழ்வானது நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் சங்கிலியன்(கிட்டுப் பூங்கா) பூங்காவில் இடம்பெறவுள்ளது.
தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் சூழல் பாதுகாப்பு அணியின் துணைச்செயலாளர் யுகேஷ் தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வின் தொடக்க உரையினை தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன் ஆற்றவுள்ளார்.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் ரகுராம் அவர்களும், சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி கோசலை மதன் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
Spread the love