Home இலங்கை 10 ஆவது நாடாளுமன்றின் முக்கிய புதிய நியமனங்கள்!

10 ஆவது நாடாளுமன்றின் முக்கிய புதிய நியமனங்கள்!

by admin

தேசிய மக்கள் சக்தியின் (NPP) நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதிமொஹொமட் ரிஸ்வி சாலி மற்றும் ஹேமாலி வீரசேகர ஆகியோர் இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தில் முக்கிய பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி, (தேசிய மக்கள் சக்தியின்) NPP கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மொஹொமட் ரிஸ்வி சாலி பிரதி சபாநாயகராக நியமிக்கப்பட்டார்.

அவரின் பெயர் அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் முன்மொழியப்பட்டது மற்றும் அமைச்சர் சரோஜா பால்ராஜால் ஆதரிக்கப்பட்டது.

குழுக்களின் பிரதித் தலைவராக (தேசிய மக்கள் சக்தியின்) NPP நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகர நியமிக்கப்பட்டார்.

கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமலி வீரசேகரவின் பெயரை அமைச்சர் சுனில் ஹந்துநெத்தி முன்மொழிந்தார்.

இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவராக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவர் சஜித் பிரேமதாச சபையின் சபாநாயகரால் அங்கீகரிக்கப்பட்டார்.

புதிய நாடாளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஆரம்பமான நிலையில், இலங்கையின் 10 ஆவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தேசிய மக்கள் சக்தியின் ( NPP) நாடாளுமன்ற உறுப்பினர் அசோக சபுமல் ரன்வல நியமிக்கப்பட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More