125
மூன்று பிள்ளைகளையும் கணவனையும் விட்டு பிரிந்து வேறு ஒரு ஆணுடன் தங்கியிருந்த 29 வயதுடைய பெண்ணொருவரை எதிர்வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நாவற்குழி பகுதியை சேர்ந்த 04 , 06 மற்றும் 10 வயதுடைய மூன்று பிள்ளைகளையும் , கணவனையும் விட்டு பிரிந்து , வேறு ஒரு ஆணுடன் கீரிமலை பகுதியில் அப்பெண் வசித்து வந்துள்ளார்.
அது தொடர்பில் பெண்ணின் கணவரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , காவல்துறையினர் அப்பெண்ணை கைது செய்து சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் முற்படுத்தினர். அதனை அடுத்து அப்பெண்ணை எதிர்வரும் வரும் 03ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Spread the love