முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன, இன்று வியாழக்கிழமை (21) பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ளவத்தையைச் சேர்ந்த சுப்பிரமணியன் மனோகரன் என்ற வர்த்தகர் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக டக்ளஸ் தேவானந்தா செய்த முறைப்பாடு தொடா்பில் இடம்பெற்ற வழககின் போது , அவா் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுமுள்ளது. இந்த வழக்கு, இரகசிய காவல்துறையினாினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா நோய்வாய்ப்பட்டிருப்பதால் அவர் நீதிமன்றில் முன்னிலையாக மாட்டார் என அவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தெரிவித்துள்ளாா். எனினும் சுகவீனம் தொடர்பான மருத்துவ அறிக்கை சமர்ப்பிக்கப்படாத காரணத்தினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொழிலதிபர் சுப்பிரமணியன் மனோகரன் என்பவர், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 9 ஆம் திகதி அல்லது அன்றைய தினத்தில் கணக்கில் பணம் இல்லை என்பதை அறிந்து தலா பத்து மில்லியன் ரூபாய் காசோலைகளை வழங்கி மோசடி செய்ததாக, அவருக்கு எதிராக டக்ளஸ் தேவானந்தவால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் முதல் சாட்சியான தேவானந்தாவுக்கு சாட்சியமளிப்பதற்கான கடைசித் திகதி வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி சம்பத் ஹேவாபத்திரன நீதிமன்றில் தெரிவித்துள்ளாா். இரு தரப்பையும் பரிசீலித்த மாஜிஸ்திரேட், சாட்சிக்கு பிடியாணை பிறப்பித்து, விசாரணையை ஜனவரி 23ம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளாா்.