130
கடந்த 26.11.2024 செவ்வாய்க்கிழமை அன்று நிந்தவூரில் இருந்து சம்மாந்துறை நோக்கிச் சென்ற 11 பேரை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் வெள்ள நீரில் அகப்பட்டு தடம்புரண்ட நிலையில் காணாமல் போயிருந்த 6 போின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

நிந்தவூர் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரியிலிருந்து சம்மாந்துறைக்கு விடுமுறையில் சென்ற மாணவர்களே நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனா். . இவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 வயதுக்கும் 16 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் ஆவர்.
நேற்று புதன்கிழமை (27) மாலை வரை 04 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் சீரற்ற காலநிலை மற்றும் இருள் காரணமாக மீட்புப்பணி நிறுத்தப்பட்டு இன்று காலை மீண்டும் ஆரம்பமான நிலையில் மேலும் 2 மாணவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன இன்று மீட்கப்பட்ட சடலங்கள் உழவு இயந்திர சாரதி மற்றும் நடத்துநர் ஆகியோரது சடலங்களாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சடலங்கள் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன.
Spread the love