333
ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தவிசாளரும் மூத்த அரசியல்வாதியுமான வேதாந்தி சேகு இஸ்ஸதீன் தனது 80ஆவது வயதில் இன்று(28) காலமானார். இலங்கை முஸ்லிங்களின் மூத்த அரசியல் தலைவரும் ,எழுத்தாளரும் கவிஞருமான சேகு இஸ்ஸதீன் மறைந்த தலைவர் அஷ்ரப்புடன் இணைந்து முஸ்லிம் காங்கிரஸை ஸ்தாபித்தார்.
வடகிழக்கு இணைந்த மாகாணத்தின் முதலாவது மாகாண சபையின் முதலாவது எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த அவா் 2001 முதல் 2010 ஆம் ஆண்டு வரை அவர் நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார்.சிறிது காலம் நோய் வாய்ப்பட்டிருந்த இவா் இன்று காலமானார்.
Spread the love