இலங்கையில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 பேர் காயமடைந்துள்ளம் இருவர் காணாமல் போயுமுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
21 மாவட்டங்களின் 175 பிரதேச செயலகப் பிரிவுகளில் 98,635 குடும்பங்களைச் சேர்ந்த 330,894 பேர் சீரற்ற காலநிலையினால் இன்று (28) காலை வரை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 82 வீடுகள் முழுமையாகவும் 1,465 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
267 இடைத்தங்கல் முகாம்களில் 8,358 குடும்பங்களைச் சேர்ந்த 26,625 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.