131
முல்லைத்தீவு-சிலாவத்துறை பகுதியில் நேற்று (29) பிற்பகல் தீயில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது. சிலாவத்துறை பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஒருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.
தனது மகனின் வீட்டிற்கு அருகிலுள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்துள்ள அவா் குளிரான காலநிலை காரணமாக வீட்டுக்குள் பற்றவைக்கப்பட்ட தீ பரவியதில் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என காவல்துறையினா் சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.
உயிாிழந்தவாின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாஞ்சோலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love