345
மன்னாரிற்கு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (1) பயணம் மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் , வெள்ள அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களுக்கு சென்று பாா்வையிட்டுள்ளாா்.
இதன் போது மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் சிறிஸ்கந்த குமார் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப் , ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது எழுத்தூர் பாடசாலை,செல்வநகர் ஆலய மண்டபம் போன்ற இடங்களில் தங்கியிருந்த மக்களையும், குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களை பார்வையிட்டு அவர்களுக்கு உலர் உணவு பொதி யையும் வழங்கி வைத்தாா்
Spread the love