332
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் பிறப்பு – இறப்பு பதிவாளர் உயிரிழந்துள்ளார். பிறப்பு – இறப்பு பதிவாளரான தாவடி கிழக்கை சேர்ந்த அன்னலிங்கம் செந்தில்குமரேசன் (வயது 64) என்பவரே உயிரிழந்துள்ளார்.
மானிப்பாய் பகுதியில் இருந்து தாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த கார் மோதி விபத்துக்குள்ளானதில் , படுகாயமடைந்தவரை யாழ் . போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற வேளை வழியில் உயிரிழந்துள்ளார். விபத்து சம்பவம் தொடர்பில் மானிப்பாய் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Spread the love