யாழ்ப்பாணத்தில் கிணற்றடியில் குளித்துக்கொண்டு இருந்த பூசகர் கிணற்றினுள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். சுதுமலை தெற்கு பகுதியை சேர்ந்த மகாலிங்கம் கருணாகரன் என்ற பூசகரே உயிரிழந்துள்ளார்.
மரண சடங்கு ஒன்றிற்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்று விட்டு , வீட்டுக்கு வந்தவர் கிணற்றில் நீர் அள்ளி தோய்ந்துள்ளார். அவ்வேளை கிணற்றினுள் தவறி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் கிணற்றினுள் காணப்பட்டதை அடுத்து , உறவினர்கள் மானிப்பாய் காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து , சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டு உடற்கூற்று பரிசோதனைக்காக , யாழ் . போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பி வைத்ததுடன் , சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.