ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட லங்கா T10 சுப்பர் லீக் தொடரின் காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளரான இந்திய பிரஜையை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று கொழும்பு நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நேற்றைய தினம் இவா் ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டின் பேரில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட காவல்துறைப் பிரினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபா் லங்கா T10 சுப்பர் லீக் கிரிக்கட் போட்டித் தொடரில் பங்குபற்றிய மேற்கிந்திய தீவுகள் வீரர் ஒருவரிடம் பணத்துக்காக போட்டியை காட்டிக்கொடுப்பதற்கு முன்மொழிந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கையில் விளையாட்டு குற்றங்களை தடுக்கும் விசேட காவல்துறைப் பிரிவில் செய்த முறைப்பாட்டின்படி அவரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.